எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!! ஜிமெயிலிலும் தமிழ்!!! மைக்ரோசாப்டிலும் தமிழ்!!!!
தமிழில் எனது முதல் பதிவு.
தமிழில் பதிவிடவேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை. ஆனால் தமிழ் தட்டச்சு தெரியாததால் அதற்க்காக முயற்சிக்கவில்லை.
சற்று முன் மைக்ரோசாப்ட் இணையதளத்தில் சில தகவல்களை தேடிக்கொண்டிருந்தபொழுது அதன் தகவலிரக்க பக்கம் என் கவனத்தை ஈர்த்தது. காரணம் அப்பக்கம் தமிழில் இருந்ததுதான். இதோ உங்கள் பார்வைக்கு.
மற்றுமொறு சந்தோஷமான செய்தி!!! கூகிள் நிறுவனம் தமிழில் ஜிமெயிலை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கை முழுக்க முழுக்க தமிழ் மயமாக்கலாம். அஞ்சல் எழுது (Compose mail),ஆவணங்கள் (Documents),நட்சத்திரமிட்டது (Starred),அனுப்பிய அஞ்சல் (Sent mail),குப்பை (Trash) இப்படி எல்லாமே தமிழ் மயமாகியிருந்தாலும் சில ஆங்கில வார்த்தைகள் மட்டும் அப்படியே தமிழில் மொழிமாற்றம் செய்யப்படாமல் தங்கிலீஷில் வழங்கப்படுகின்றன. உதாரணம் இன்பாக்ஸ், ஸ்பேம், லேபிள்கள். விரைவில் இதுவும் சுத்தமான தமிழுக்கு மாறிவிடும்.
உங்கள் ஜிமெயிலில் Settings போய் அங்கு Gmail display language-ல் Tamil-ஐ தெரிவு செய்தால் உங்கள் ஜிமெயில்திரை முழுக்க முழுக்க தமிழ் மயமாகும்.
சபாஷ் கூகிள்
இவையெல்லாம் எனக்குள் இருந்த தமிழ் ஆர்வத்தை தூண்டிவிட, வந்ததுதான் இந்த பதிவு. என்னுடைய லினக்ஸ் கணிணியில் SCIM நிருவி அதன் மூலமாக “Tamil-Phonetic” விசைபலகை தேர்வு செய்து இதை இங்கு பதிவு செய்கிறேன்.

